free website hit counter

மூலிகை அறிவோம் - மேனி பளபளக்க பப்பாளி

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அழகுசாதன பொருட்களில் முக்கிய வகிபாங்கு வகிக்கும் ஒரு பழவகை. பளபளப்பான மேனியையும் மினு மினுப்பான முகத்தையும் தருவதால் பெண்டிரால் அதிகம் கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
தாவரவியல் பெயர்- Carica papaya
குடும்ப பெயர்- Caricaceae
ஆங்கிலப் பெயர்- Papaw
சிங்கள பெயர்- Papol
சமஸ்கிருத பெயர்- Madhukarkati
வேறு பெயர்கள்-
பப்பாசி

பயன்படும் பகுதி-காய், விதை, பால்

காய், பால், விதை.
சுவை- கைப்பு

பழம்
சுவை -இனிப்பு
வீரியம்-வெப்பம்
விபாகம்-கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Papain
Alkaloid carpaine
Carpasemine
Chymopapain
Pseudocarpaine

மருத்துவ செய்கைகள்-
காய், பால், விதை
Abortifacient- கருச்சிதைச்சி
Anthelmintic- புழுக்கொல்லி
Emmenagogue- ருதுவுண்டாக்கி

பழம்
Carminative- அகட்டுவாய்வகற்றி
Digestive- செரிமானம் உண்டாக்கி
Diuretic - சிறுநீர் பெருக்கி
Galactogogue- பால் பெருக்கி
Laxative - மலமிளக்கி
Stomachic- பசித்தீ தூண்டி
Tonic - உரமாக்கி

தீரும் நோய்கள்-
நாக்குப்பூச்சி
குன்மம்
கிருமி
நரம்பு தளர்ச்சி
நரம்பு வலி
வீக்கம்
கட்டி
கரப்பான்
வயிற்று வலி
மலக்கட்டு

பயன்படுத்தும் முறைகள்-
இலையை வெந்நீரில் போட்டெடுத்து, நரம்புத்தளர்ச்சி, நரம்பு வலி முதலியவைகளுக்கு ஒற்றிடமிடலாம். அல்லது நெருப்பில் வாட்டி வைத்தும் கட்டலாம்.

இலையை நசுக்கி வெதுப்பி, வீக்கம், கட்டி, முதலியவைகளுக்கு வைத்துக் கட்டலாம்.

பிஞ்சுக் காயைக் கீறினால் பால் வடியும். இப்பாலிலிருந்து ஒருவகைச் சத்துள்ள உப்பு எடுத்து, வயிற்றுவலி, குன்மம், அசீரணம் முதலிய நோய்களுக்குக் கொடுக்க, அவை நீங்கும்.

இப்பாலை, நாப்புண், தொண்டைப்புண் இவைகளுக்குத் தடவலாம்.

பாலுடன், வெங்காரமும் நீரும் சேர்த்துக் குழப்பி மைக்குரு, வேர்க்குரு முதலிய சருமத்தில் எழும்பும் குருவிற்குத் தடவ அவை விழுந்துவிடும். இப்பாலுடன் சிறிது படிகாரம் சேர்த்துக் கரப்பானுக்குப்போட அவை குணமாகும்.

பால் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, வெந்நீர் 80 ml இவைகளை ஒன்றுபடக் கலந்து நன்றாய்க் குளிர்ந்தவுடன் சாப்பிட்டு, 2-மணி நேரம் கழிந்தபின் ஆமணக்கெண்ணெய் 70 ml, தேசிப்பழ ரசம் 35 ml கலந்து சாப்பிட கிருமிகள் விழும். மீளவும் வேண்டுமானால் இரண்டாம் நாளும் சாப்பிடவும். 3 முதல் 7 வயதுக் குழந்தைகளுக்கு 1 உச்சிக்கரண்டி பிரமாணம் கொடுக்கலாம். இதனால், வயிற்றுவலி கண்டால் சருக்கரையும் தண்ணீரும் கலந்து வேண்டிய அளவு குடிக்கச்செய்தால் உடனே நீங்கும்.

வயிற்றுவலி, குன்மரோகம் முதலியவைகளுக்கு இப்பாலை, சருக்கரை சேர்த்த நீர் அல்லது சருக்கரை சேர்ந்த பாலுடன் கூட்டிக் கொடுக்கலாம்.

பழத்தைத் தினமும் புசித்து வந்தால், மலக்கட்டு நீங்கும். மூலமும் வயிற்றுவலியும் தீரும்.

பழத்தை உலர்த்தியாவது அல்லது உப்பிட்டு உலர்த்தியாவது சாப்பிட வலப்பாட்டிரல், இடப்பாட்டீரல் முதலியவற்றின் வீக்கங்கள் குறையும். காயைத் தோல் நீக்கிச் சமையல் செய்து சாப்பிடுவது சிலர் வழக்கம். இது முலைப்பாலைப் பெருக்கும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction