அதிகளவு விட்டமின் சி சத்தினை கொண்டிருக்கும் பழவகை எது தெரியுமா? கொய்யா தான்!
தாவரவியல் பெயர்- Psidium guajava
குடும்ப பெயர்- Myrtaceae
ஆங்கிலப் பெயர்- Guava
சிங்கள பெயர்- Pera
சமஸ்கிருத பெயர்- Perala
பயன்படும் பகுதி-
இலை,காய், பழம், பட்டை, வேர்
இலை, வேர்
சுவை- துவர்ப்பு
வீரியம்-வெப்பம்
விபாகம்-கார்ப்பு
பழம்
சுவை -இனிப்பு
வீரியம் - சீதம்
பிரிவு - இனிப்பு
வேதியியல் சத்துக்கள்-
Vitamin C
Quercetin
Linoleic acid
மருத்துவ செய்கைகள்-
இலை,காய், பட்டை, வேர்
Astringent- துவர்ப்பி
பழம்
Tonic- உரமாக்கி
பூ
Anthelmintic- புழுக்கொல்லி
தீரும் நோய்கள்-
இலை
கொலரா
பல்வலி
அசீரணம்
வாந்தி
பழம்
மலக்கட்டு
பிஞ்சு, பட்டை
அதிசாரம் (Dysentery)
குறிப்பு கொய்யாப்பழம் அதிகம் உட்கொள்ள முத்தோடம், தலை மயக்கம், அரோசகம் (பசியின்மை) மந்தம் ,வாந்தி, வயிற்றுப்பல் கரப்பான் தோன்றும்.
பயன்படுத்தும் முறைகள்-
இலை
இலையைக் கஷாயம் செய்து வாந்திபேதிக்குக் கொடுக்கலாம். வாந்தியையும் பேதியையும் கண்டிக்கும்.
கருணைக்கிழங்கின் காறல் நீங்க இதன் இலையை, அவரையிலைக்குப் பதிலாகச் சேர்த்து வேகவைக்கலாம்.
இலையை வாயிலிட்டு மென்றால் பல்வலி சாந்தமாகும்.
இதிலிருந்து ஒருவகை எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இலைக்கொழுந்து, அசீரணத்தைக் கண்டித்து குடலுக்கு வலுவைத் தரும்.
பழம்
பழம் நாவிற்கு உருசியானது. தின்றால் மலம் இளகும்; வீரியம் பெருகும்.
பழத்தைச் சருக்கரை சேர்த்துக் காய்ச்சிக் கிளறி உணவிற்குச் சேர்க்கலாம்.
கொய்யாப்பிஞ்சைக் கஷாயமிட்டு அதிசாரத்துக்குக்(dysenteric condition) கொடுக்கலாம்.
பழத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, அத்தண்ணீரைத் தாக சாந்திக்காகக் கொடுக்கலாம்.
பட்டை, வேர்
இவைகளில் ஏதாவதொன்றை கஷாயம் செய்து கொடுக்கக் குழந்தைகளின் அதிசார பேதி நின்றுபோகும்.
செய்முறை-
பட்டை அல்லது வேர் 35g, நீர் 420 ml சேர்த்துக் கஷாயமிட்டு, ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்து வரவும். மேற்படிக் கஷாயத்தை ஊழி நோயிலுண்டாகும் (Cholera) வாந்திக்கும் கொடுக்கலாம்.
இக்கஷாயத்தைக் குழந்தைகட்குத் தோன்றும் அடித்தள்ளலுக்குக் கழுவலாம்.
இதையே அழுகிய இரணங்களுக்கும், வாய் விரணங்களுக்கும் உபயோகித்தும் சுகம் பெறலாம்.
வெள்ளைக் கொய்யாவின் வேர்ப்பட்டை
17g , நீர் 280 ml, இதைப் பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு வரும் பேதியைக் கட்ட உள்ளுக்குக் கொடுக்கலாம்.
அதிசாரத்துக்கு இக்கஷாயத்தைக் கொண்டு வஸ்தி (Enema) செய்யலாம்.
கொய்யாப் பழரசமானது 2 ஆம் வகை நீரிழிவில் குருதியில் குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என நம்பப்படுகின்றது.
Guava juice may be helpful in regulating blood sugar in type 2 diabetes (Sharon M. Herr.)
~சூர்யநிலா