இரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்கு பலத்தை அளிக்கும் அத்திப்பழம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உடல் உஷ்ணத்தை தணிப்பதோடு தாது விருத்தியையும் உண்டாக்கும்.
குடும்ப பெயர் - Moraceae
ஆங்கிலப் பெயர் - Fig
சிங்களப் பெயர் - Aththikka
சமஸ்கிருத பெயர் - Udumbara
வேறு பெயர் - அதம், அதவு, உதும்பரம், கோளி, சுப்பிரதஷ்டம்
பயன்படும் பகுதி - பிஞ்சு, காய், பழம், பால், பட்டை, மது.
வேதியியல் சத்துக்கள்-
Leaves- Gluacol
Fruit- Gluacol, Lupeol acetate, Friedelin, higher hydrocarbons, Phytosterols,Calcium, Phosphorus, Iron, Vitamin A & C
தென் இந்தியாவில் இதன் பிஞ்சையும் காயையும், சமைத்து உண்பது வழக்கம்.
மருந்துண்ணுங்காலங்களில் இதைப் பத்திய பதார்த்தமாக உபயோகிப்பதுமுண்டு.
பிஞ்சு
சுவை - துவர்ப்பு வீரியம் - சீதம்
பிரிவு - இனிப்பு
மருத்துவ செய்கை
Astringent-துவர்ப்பி
நோய் நிலைமை -
மூலக்கிராணி, இரத்தமூலம்,
மூலவாயு, வயிற்றுக்கடுப்பு
பயன்படுத்தும் முறை - சமைத்துண்ண மேற்கண்ட பிணிகளைப் போக்கும்.
கஷாயஞ் செய்து உட்கொள்ள வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
காய்
சுவை -துவர்ப்பு
வீரியம் -சீதம்
பிரிவு - இனிப்பு
மருத்துவ செய்கை -
Astringent-துவர்ப்பி
நோய் நிலைமை
பிரமேகம், வாதநோய், சூலை, சரீரவெப்பு, புண் (விரணம்)
பயன்படுத்தும் முறை - சமைத்துண்ண மேற்கண்ட நோய்கள் குணமாகும்;
மலங்கழியும்.
பழம்
சுவை - இனிப்பு வீரியம் - சீதம்
பிரிவு - இனிப்பு
மருத்துவ செய்கை - haemtonic- குருதிப்பெருக்கி
Laxative- மலமிளக்கி
பழத்தை மணப்பாகு செய்து அல்லது உலர்த்திச் சூரணஞ் செய்து உட்கொள்ள, மலபந்தம், மது நீரிலுள்ள மது, நாவரட்சி, உடல் வெதும்பல் இவைகள் நீங்கும். இரத்தம் விருத்தியாகும்.
பால்
சுவை - துவர்ப்பு, சிறு இனிப்பு
வீரியம் - சீதம்
பிரிவு - இனிப்பு
மருத்துவ செய்கை
Astringent-துவர்ப்பி
நோய் நிலைமை -
பித்தகோபம், நீரிழிவு, சூலை, இரத்தமூத்திரக்கிரிச்சரம் இரத்தபேதி, பெரும்பாடு, வெள்ளை, மதுமேகம், தாதுக்குறைவு
பயன்படுத்தும் முறை -வெண்ணெய் அல்லது சீனியுடன் கூட்டிக்கொடுக்க, மேற் குறிப்பிட்ட பிணிகள் சாந்தமடையும்.
மதுமேகத்தாற் பிறந்த பிளவை, கீல்வாதம், மூட்டுவீக்கம், இவைகட்கு இப்பாலைப் பற்றிட்டுவா, நாளுக்குநாள் நன்மைதரும்.
பட்டை
சுவை - துவர்ப்பு
வீரியம் - சீதம்
பிரிவு -இனிப்பு
மருத்துவ செய்கை -
Astringent- துவர்ப்பி
நோய் நிலைமை-
ஆசனக்கடுப்பு, உதிரப்போக்கு, சீதரத்தபேதி, நாற்றமுள்ள புண்கள், பிரமேகம் ஆகிய இவைகளைப் போக்கும்.
அத்திப் பட்டைக் குடிநீர்
பயன்படுத்தும் முறை- பட்டையை விதிப்படிக் குடிநீர் செய்து கொடுத்துக் கொண்டுவர, ஆசனக்கடுப்பு முதலிய மேற்கண்ட நோய்கள் விலகும். இதைக் கொண்டு கழுவிவர, நாற்றமுள்ள புண்கள் ஆறும்.
இதன் பட்டையை பசுவின் மோர் விட்டு இடித்துப் பிழிந்த இரசத்தில் தினம் ஒன்றுக்கு இரண்டு, மூன்று முறை, 70-140ml வீதம் கொடுக்க, பெரும்பாடு நிற்கும்.
மது
சுவை-(அற்ப) இனிப்பு வீரியம் - சீதம்
பிரிவு - இனிப்பு
மருத்துவ செய்கை Alterative-உடற்றேற்றி
குணம் - மரவேரிலிருந்து இறங்கும் மதுவில் (கள்ளில்) சீனியேனும், பேயன் வாழைக்கனியேனுங் கூட்டி நாடோறும் சூரிய உதயத்திற் கொள்ள, அத்திமேகம், உட்சூடு, பித்தமயக்கம், தாகம் முதலியவைகள் தணியும்.
~சூர்யநிலா