free website hit counter

மூலிகை அறிவோம் - இலந்தையின் இனிய மருத்துவ குணங்கள்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாட்டுப்புறங்களில் தாராளமாகக் கிடைக்கும் பழவகை. அனைவராலும் விரும்பி உண்ணும் உணவு. இதன் பழம் மட்டுமல்லாது முழுத் தாவர பகுதியுமே மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது.
இலந்தையின் இனிய மருத்துவ குணங்கள் பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

தாவரவியல் பெயர்-Zizyphus jujuba
குடும்ப பெயர்- Rhamnaceae
ஆங்கிலப் பெயர்- Jujuba tree
சிங்கள பெயர்- Masan
சமஸ்கிருத பெயர்- Badari, Kola
வேறு பெயர்கள்-
இரந்தை, குல்லரி, குல்வலி, கோல், கோற்கொடி ,வதரி

பயன்படும் பகுதி-
கொழுந்து, இலை, பழம், பட்டை, வேர், வேர்ப்பட்டை, கட்டை, சமூலம்

சுவை-
பட்டை ,இலை- துவர்ப்பு, இனிப்பு
பழம்- இனிப்பு, புளிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Flavonoids
Glucosides
Rutinosides
Rhamnetin
Eriodictyol
C-glucosides
Frangulanine
Nummularine B
Mucronine D
Jujubosides
Zizybeosides
Zizyvyosides

மருத்துவ செய்கைகள்-
Astringent- துவர்ப்பி
Emollient- வரட்சியகற்றி
Tonic- உடல் தேற்றி

தீரும் நோய்கள்-
இலை
மூலம், இரத்த அதிசாரம், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் இவைகளைப் போக்கும்.

பழம்
பித்தமூர்ச்சை, அரோசகம்(பசியின்மை), வாந்தி, வலி, வாதம் இவைகளைப் போக்கும்.

வேர்
அயர்ச்சியை விலக்கும், பசியை உண்டாக்கும்.

பயன்படுத்தும் முறைகள்-
பச்சை இலையை அரைத்து சிறு எலுமிச்சங்காய் அளவு எடுத்து புளித்த மோரில் கொடுக்க, மூலம் குணமாகும்.
இலையும் பட்டையும் சேர்த்துக் குடிநீர் செய்து, இரத்த அதிசாரம், வயிற்றுக்கடுப்பு இவைகளுக்குக் கொடுக்கலாம்.
துளிரும் கட்டையும்

இவற்றை நன்றாய் அரைத்துக் கொப்புளங்கள் முதலியவற்றிற்கு வைத்துக்கட்டிவர, பழுத்து உடையும்.

பழம்
பழத்தை உலர்த்திக் விதை நீக்கிக் கொடுக்கக் கபத்தைத் தள்ளும், இலகுவாக மலத்தைப் போக்கும்.
விதையை நீக்கிவிட்டுத் தசையுடன் மிளகாயும் உப்புஞ் சேர்த்தரைத்து உலர்த்திவைத்துக்கொண்டு, ஓர் கடுக்காயளவு, காலையில் கொடுத்துவர பித்தவாந்தி, அரோசகம் நீங்கி பசியுண்டாகும்.

பட்டையும் இலையும் சேர்த்துத் தண்ணீரில் கொதிக்கவைத்து, வாதரோகிகளைக் குளிக்கச்செய்யலாம்.

பட்டையை உலரவைத்து இடித்துத் தூளாக்கி, பழைய புண்களுக்கும், விரணங்களுக்கும் தூவிக்கட்டலாம்.
பட்டையைக் கஷாயமிட்டு, சுரத்துக்கும் சந்நிக்கும் கொடுக்கலாம்.

வேர்ப்பட்டை
இதன் சாற்றை உட்கொள்ள, மலத்தைக் கழிக்கும், இதன் வெளிப் பிரயோகத்தால் கீல் வாதத்தைப் போக்கும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction