free website hit counter

மூலிகை அறிவோம் - மாதுளையின் மகத்துவம்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மருத்துவ முத்துக்களை தன்னகத்தே கொண்டு மாதர்களின் பற்பல பிணிகள் போக்கும் மாதுளையின் மருத்துவ ரகசியங்கள் பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
தாவரவியல் பெயர்- Punica granatum
குடும்ப பெயர்- Punicaceae

ஆங்கிலப் பெயர்- Pomegranate
சிங்கள பெயர்- தெலும்
சமஸ்கிருத பெயர்- Shukhdana
வேறு பெயர்கள்- தாடிமம், பீசபூரம், மாதுலங்கம், மாதுளம், மாதுளுங்கம் , கழுமுள்

பயன்படும் பகுதி- பூ,
பிஞ்சு, பழம், விதை, பட்டை , வேர்

பூ, பழத்தோல், பட்டை
சுவை- துவர்ப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- கார்ப்பு

பழம், விதை
சுவை - இனிப்பு
வீரியம் -சீதம்
விபாகம் -இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Tannin
Ellagitannin
Granatin B
granatins A,B
Punicafolin
Punicalagin
Punicalin
Ellagic acid
Malvidin pentose glycoside
Sitosterol
Ursolic acid
Aciatic acid
Maslinic acid

மருத்துவ செய்கைகள்-
Anthelmintic - புழுக்கொல்லி
Astringent - துவர்ப்பி
Refrigerant - குளிர்ச்சியுண்டாக்கி
Stomachic - பசித்தீ தூண்டி
Styptic - குருதிப்பெருக்கடக்கி
Toenifuge - சாயமேற்றி

தீரும் நோய்கள்-
பூ
பித்தவாந்தி
வயிற்று கடுப்பு
வெப்பம்
இரத்த மூலம்

பிஞ்சு
அதிசாரம் வயிற்று போக்கு

பழம்
வாந்தி கபம் மிகுதாகம் பித்தநோய் மலட்டுத்தன்மை
வாய் நீர் சுரப்பு
கசப்பு
வாந்தி
விக்கல்
மாந்தம்
அதிக சுரம்
நெஞ்செரிவு
காதடைப்பு
நீங்காத மயக்கம்

பயன்படுத்தும் முறைகள்-
பூவின் மொக்கை உலர்த்தி சூரணமாக்கி 260 mg கொடுக்க இருமல் நீங்கும்.

மேற்படி சூரணத்துடன் ஏலக்காய்த்தூள், கசகசா தூள், குங்கிலியத் தூள் சமனெடை சேர்த்து 130-260 mg வீதம் தினம் இரு வேளை கொடுத்து வர நாட்பட்ட அதிசாரம், சீத பேதி நீங்கும்.

பூவின் சாறும் அருகம்புல்லின் சாறும் சமனெடை சேர்த்துக் கொடுக்க இரத்த பீனிசம் நீங்கும்.

மேற்கூறிய பூ, புல் இவ்விரண்டையும் கஷாயமிட்டு பொரித்த வெங்காரம் சிறிது கூட்டி வாய் கொப்பளித்து வர தொண்டை நோய் நீங்கும். இதனை பெண்களுக்கு பீச்சி வர இரத்த பிரமேகம், வெள்ளை, கருப்பாசயப் புண், ஆசன துவாரப் புண் முதலியன நீங்கும்.

பூவை உலர்த்தி சூரணித்து அதில் 4 g , வேலம் பிசின் தூள் 4g, அபின் 180 mg சேர்த்து வேளைக்கு 520- 780 mg வீதம் கொடுத்துவர சீதபேதி, இரத்தபேதி, ரத்த மூலம், ரத்த மூத்திரம் இவை நீங்கும்.

பிஞ்சை கசாயம் இட்டு சீதபேதி, அதிசாரம் முதலியவைகளுக்கு கொடுப்பது நாட்டு வழக்கம்.

இதனை கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து அருந்த பித்தத்தை சமனப்படுத்தும். குளிர்ச்சியை உண்டு பண்ணும். சுரம் அழலை தாகம் இவை நீங்கும்.

பழத்தோலுடன் சிறிது இலவங்கம் , லவங்கப்பட்டை நசுக்கி போட்டு முறைப்படி கசாயமிட்டு ஆறவிட்டு 20 தொடக்கம் 40 மில்லி லீற்றர் வீதம் நீர் விட்டு முறைப்படி கஷாயம் செய்து 20 -40 ml கொடுத்து வர சீதபேதி நீங்கும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction