free website hit counter

லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவில் இந்திய நடிகர் சாருக்ஹானுக்கு கௌரவம் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச திரைப்படவில், இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு விருது வழங்கப்படவுள்ளது. லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 77வது பதிப்பு ஆகஸ்ட்  07ந் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.

தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் இந்த பிரமாண்டத் திரைத்திருவிழாவில், இந்திய சூப்பர் ஸ்டாரும், உலகளாவிய கவனம் பெற்றிருக்கும்  இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு,  தொழில் சாதனை விருதான, மதிப்புமிக்க பார்டோ அல்லா கேரியரா (Pardo alla Carriera) கௌரவ விருது வழங்கப்படவுள்ளது. லோகார்னோ திரைப்பட விழாவின் பங்காளர்களில் ஒருவரான  அஸ்கோனா-லோகார்னோ சுற்றுலா அமைப்பின்  ஆதரவில் வழங்கப்படும் பார்டோ அல்லா கேரியரா விருது உலகின் பிரமாண்டத் திறந்தவெளித் திரைமுற்றமான பியாற்சா கிரான்டே (Piazza Grande) பெருமுற்றத்தில் ஆகஸ்ட் 10 சனிக்கிழமை இரவு வழங்கப்படவுள்ளது.

பார்டோ அல்லா கேரியரா விருதினை இதுவரை பெற்றுள்ள உலகப் பிரபலம் மிக்க கலைஞர்கள், ஃபிரான்செஸ்கோ ரோஸி, கிளாட் கோரெட்டா, புருனோ கான்ஸ், கிளாடியா கார்டினாலே, ஜானி டோ, ஹாரி பெலாஃபோன்டே, பீட்டர்-கிறிஸ்டியன் ஃபியூட்டர், செர்ஜியோ காஸ்டெல்லிட்டோ, விக்டர் எரிஸ், மார்லன் குட்ஸீவ், ஜாய்ன் ஓகிர்ஃப், ஜாய்ன் ஆடிர்கின் ஆகியோர் வரிசையில் இந்த ஆண்டு சாருக்ஹான் பெறுகின்றார்.

'கிங் கான்'  என இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் பாலிவுட்டின்  சிறந்த நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் இந்திய சினிமாவின்  உயிருள்ள அடையாளமாக மாறியுள்ளார். சாருக்ஹானின் தொழில் வாழ்க்கையின் முக்கியப் படம் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் 2002 வெளிவந்த தேவதாஸ் முக்கியமானது. 

ஷாருக்கானின் பல படங்கள் உலகளவில் விரும்பப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே அவரை மிகவும் பிரபலமான பெயரை உருவாக்கி, உலகெங்கிலும் உள்ள பல மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் இந்தியாவையும் அவரது பல படங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வழிவகுத்தது. கான் 2007 இல் Ordre des Arts et des Lettres மற்றும் 2014 இல் Ligion d'honneur என்ற விருதை பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளார். 

2023 ல் வெளியான சாருக்ஹானின் மூன்று படங்கள்   பதான், ஜவான் மற்றும் டன்கி  அனைத்தும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றன. சாருஹானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த ஜவான்,  இந்தத் தலைமுறையின் மிகவும் பிரியமான இந்திய நட்சத்திரங்களில் ஒருவராக அவரது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தி, இதுவரை அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக சினிமா வரலாற்றில் பதிவாகியது. இத்திரைப்படம் தமிழ் இயக்குனரான 'அட்லி' யின் இயக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.locarnofestival.ch/

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction