இன்று பெப்ரவரி 15ம் திகதி, 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகிறது. ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அமைந்துள்ள பெர்லினால் பலஸில் ஆரம்ப நிகழ்வுனள் இடம்பெறுகின்றன.
ஆரம்ப நிகழ்வுகளில், ஜேர்மன் கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கிளாடியா ரோத், பெர்லின் மேயர் காய் வெக்னர், இந்த ஆண்டு திரைப்படவிழாவின் நடுவர்குழுத் தலைவர் லூபிடா நியோங்கோ, அத்துடன் விழா மேலாண்மையாளர்கள் மரியட் ரிசென்பீக் மற்றும் கார்லோ சத்ரியன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இக் கோலகத் தொடக்க விழாவின் போது, சர்வதேச நடுவர் குழுவும் அறிமுகப்படுத்தப்படும்.
உலகின் பல்வேறு நாடுகளிலிமிருந்து, சினிமாத்துறைக் கலைஞர்கள், மற்றும் பிரபலங்கள், பேர்லினுக்கு வருகை தருகின்றார்கள். விழா ஆரம்பத்தினைத் தொடர்ந்து, விழாவின் தொடக்கப்படமாக, போட்டிப்படங்களில் ஒன்றான, அயர்லாந்து, பெல்ஜியக் கூட்டுத் தயாரிப்பாக, Tim Mielants இயக்கத்தில் கிளாரி கீகனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான Small Things Like These திரைப்படம் காட்சிப்படுத்தப்படுகிறது.
ஆரம்ப நிகழ்வுகள் ZDF/3sat இல் இரவு 7.20 முதல் ஒளிபரப்பப்படும். பேர்லினால் இணையதளத்திலும் இதனை நேரடியாகக் காணலாம்.
photo - copyright Berlinale