விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் தொடர்பான ஜிஎஸ்டி வரிகள் விவகாரம் தொடர்பாக, விஷாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்று நடந்து வந்தது.
இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட சம்மன்கள் அனுப்பியும் விஷால் ஒருமுறை கூட ஆஜராகவில்லை. நீதிமன்றத்தை மதிக்காத விஷாலின் இந்த நடவடிக்கை தொடர்பாக, சென்னை மண்டல ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடுத்திருந்த வழக்கில், பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன் அபராதமும் விதித்தது.
2016-2018 இடையிலான புகார்களில், விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த பிறகே, அவரது நிறுவனம் விசாரணைகளில் உடன்பட ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில் குறைந்தபட்ச அடையாள அபராதமாக ரூ500 விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனியாவது விஷால் நீதிமன்றம் செல்வாரா எனத் தெரியவில்லை.