கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் எப்போதும் பெண் பாத்திரங்கள் அழகுணர்ச்சியும் சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களாகவும் அமைந்திருக்கும்.
பல நடிகைகள் திரையில் அப்பாத்திரங்களை பிரதிபலித்து இதயங்களைத் வென்றுள்ளனர், மேலும் பலர் தங்கள் திறமையையும் பிரபல்யத்தையும் அப்பாத்திரங்கள் மூலம் மீட்டெடுத்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனனின் மிடாஸ்-டச், இந்த பெண் கதாபாத்திரங்களை நம் அனைவர் மனதிற்கும் மிகவும் நெருக்கமானாதாக்கி விடுகிறது. இந்த வரிசையில் ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் தனது அழகான, தோற்றத்திற்காக புகழ் பெற்ற மும்பையைச் சேர்ந்த நடிகை சித்தி இதானி தான் அவர். வென்று தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில்
அறிமுகமாகிறார்.
தற்போது படக்குழு சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது, படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் குரலில், அவர் இசையமைப்பில் வெளியான “மறக்குமா நெஞ்சம்” பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கத்து. இந்தப் படத்துக்காக உடல் எடை பாதியாகக் குறைந்த தோற்றத்தில் சிம்பு வருகிறார்.