free website hit counter

அப்பாவின் தயாரிப்பில் சம்பளமில்லாமல் நடித்த மகன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

'சிவா மனசுல சக்தி' போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் தாண்டி தற்போது வரிசையாக தோல்விப் படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. ஹிட் கொடுக்கவேண்டிய கட்டா யத்தில் இருக்கும் ஜீ வாவின் நடிப்பு 83 படத்தில் ஓகே என்கிற அளவில் மட்டுமே இருந்தது.

தற்போது'வரலாறு முக்கியம்' என்ற ரோம்-காம் படம் மூலம் ரசிகர் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஜீவாவின் அப்பாவும் பழம்பெரும் தயாரிப்பாளருமான அர்.பி. சௌத்திரி தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு சம்பளம் கிடையாது.

நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, விடிவிகணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இந்தப் படமாவது ஜீவாவுக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: