சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குநரான நெல்சன் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடிக்கும் அவருடைய 65-வது படம் ‘பீஸ்ட்’.
இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்றம் வெளியாகி இந்திய அளவில் சமூக வலைதள ட்ரெண்டில் முதலிடம் பிடித்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அணிருத் இசையில் 4 பாடல்கள் இடம்பெற இருக்கின்றன. அவற்றில் மூன்று பாடல்கள் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செம பீட்டில் உருவாகியுள்ளது. விஜய் இதில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்தாலும் நடனத்திலும் கலக்க இருக்கிறார். இதனால் விஜய்யின் நடன வேகத்துக்கு ஈடுகொடுக்கும்விதமாக அந்த மூன்று பாடல்களுக்காக பூஜா ஹெக்டேவுக்கு கோரியோகிராஃப் செய்யப்பட்டிருக்கும் நடன அசைவுகளுக்கு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
கோரோனா வந்து மீண்ட பூஜா ஹெக்டேட் 10 கிலோ எடை குறைந்திருக்கும் நிலையில் இந்த நடன ஒத்திகையில் கடுமையாக ஈடுபட்டு வருவதை அவருடைய கால்ஷிட் மேலாளர் படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    