free website hit counter

குடிப் பழக்கத்தை விட்டது எப்படி? மனம் திறந்த சிம்பு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சகலகலா இயக்குநர் எனப் பாராட்டப்பட்டுவரும் டி.ஆரின் கலைவாரிசான சிம்பு, குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர். அவரது படங்கள் 55 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வந்த நிலையில், காதல் விவகாரங்களால் மனமுடைந்து படப்பிடிப்புகளுக்குச் செல்லாமல் இருந்தார் சிம்பு.

ஒரு கட்டத்தில் ரஜினியைப்போல இமயமலைக்கு சென்று திரும்பியபின் உடல் எடையை குறைத்து உடலை தகுதியான ஒன்றாக மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் ‘மாநாடு’ படம் தொடங்கி அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘மாநாடு’ படத்தின் டப்பிங் உட்பட அனைத்து பணிகளும் முடிந்து தற்போது அந்தப் படத்திலிருந்து முதல் ‘மெஹரஷைலா’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது சிம்பு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மாநாடு படம் வரும் தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகவிருக்கும் நிலையில் மாநாடு படக்குழுவினர் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிம்பு, “ குடி பழக்கத்தை நிறுத்தி நேற்றுடன் ஓராண்டு காலம் ஆகிவிட்டதாக கூறினார். மேலும் பிரேம்ஜி போன்றோர் உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம். குடியை நமக்கான சந்தோஷமாகப் பார்க்காமல், நமது சந்தோஷத்தை திருடும் என்று எனக் கண்டுகொண்ட அடுத்த நிமிடமே அதை உதறியெறிந்தேன். கள்ளுண்ணாமையை உலகச் சொன்ன நாம் குடியிலிருந்து மீண்டால் நம் குடும்பமும் மகிழ்ச்சியடையும் முன்னேறும். எனவே குடியை விட நினைக்கும் நண்பர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியே வாருங்கள்” என்றார்.

மாநாடு படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். திரையரங்கில் ஆகஸ்ட் முதல் 50 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டால் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடும் திட்டத்திலும் படக்குழு உள்ளது. அது தவறினால் தீபாவளி வெளியீடு என்பதில் உறுதியாக இருக்கிறது படக்குழு.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction