ரோஜா திரைப்படம் முதல் பொன்னியின் செல்வம் திரைப்படம் வரை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இணைந்து 30 வருடங்கள் கடந்துள்ளதை
திரையுலகம் கொண்டாடிவருகிறது. இருவரும் இணைந்து படைக்கும் இசையும், திரைக்கதையும் வெற்றிபெற்ற சரித்திரங்களே அதிகம்.
இந்நிலையில் இந்தியாவின் பிரபல தனியார் பால் உற்பத்தி நிறுவனம் ஒன்று இவர்களின் வெற்றிக்கூட்டணியை கொண்டாடும் விதத்தில் தமது தனித்துவமான கார்ட்டூன் வரைபடங்களில் ஏ.ஆர்.ஆர் மற்றும் மணிரத்தினம் அவர்களின் உருவங்களை அமுல் பேபியாக வரைந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனை ரசித்து மீள்பதிவு செய்த ஏ.ஆர்.ரஹ்மான் "சிலவேளைகளில் நான் வேகான்" எனகுறிப்பிட்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் விளம்பர நோக்கமாக பதியப்பட்டாலும் தற்போது இந்த வரைபடல் வைரல் ஆகிவருகிறது.