free website hit counter

சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதுகளை பெற்ற ஜோடி

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்றைய தினம் இந்தியாவின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு திரைப்பட நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பலருக்கு விருதுகளை வழங்கினார்.

இதன் போது சிறந்த நடிகருக்கான விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு சிறந்த திரைப்படத்திற்கான விருதை அவரது மனைவி ஜோதிகாபெற்றுள்ளார்.

இந்த விழாவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டதும், ஒருவருக்கொருவர் விருதுகளை பெற்றுக்கொண்டபோது தமது கைப்பேசிகளில் படங்களைக் கிளிக் செய்வதும் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றிருந்தது.

டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கைச் சம்பவங்களை பிரதிபலித்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 68வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை என நான்கு முக்கிய விருது வகைகளில் மூன்றில் வென்றிருப்பது குறிப்பிடதக்கது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: