free website hit counter

"47 வருட ரஜினிசம்" - எளிமையாக கொண்டாடிய ரஜினியின் குடும்பத்தார்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
1975-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த்.
அதன்பின்னர் இவரின் நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

இந்த நெகிழ்ச்சியான தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார்.

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த 47 Years of Rajinism பேனரை வியப்பாக எளிமையான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்கும் புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாடப்படும் அதேவேளையில் அவருடைய தந்தையின் திரைவாழ்க்கையை குறிக்கும் வகையில் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சுதந்திரத்தின் 76 ஆண்டுகள் தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம். பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு அர்ப்பணிப்பு! அவருக்கு பிறந்ததில் பெருமை,பெருமை மகள் என்று குறிப்பிட்டு, அதோடு ரஜினிக்கு தேசியக்கொடியை குத்தி விடும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula