அஜித்தின் ' வலிமை ' படம் இந்த ஆணடு தீபாவளிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அன்மையில் அப் படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

அதில் மோட்டார் பைக்குடன் தோன்றிய அஜீத்தின் படம் காணப்பட்டது. தற்போது, அஜித்தின் பைக் ரைடிங் புகைப்படங்கள் சில ட்விட்டரில் வெளியாகியுள்ளன. இவை சிக்கிமில் எடுக்கப்பட்டடவை என்றும், படத்தின் காட்சிப்புலங்கள் அவ்வாறே உள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் பைக், மற்றும் மோட்டார் கார் ரேஸ்களில் ஆர்வம் உள்ளவர் நடிகர் அஜித். அவரது பலப் படங்களில் சேசிங் சீன்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியாகியுள்ள படங்களும், போஸ்டர்களும், அஜித்தின் வலிமை படத்திலும் அத்தகைய காட்சிகளைக் கொண்டிருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்புக்கள் 2019 முதல் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய இப் படம் வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக தாமதமாயிற்று.
அஜித் ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்?
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    