free website hit counter

அஜித் ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாலிவுட்டின் கனவுத் தாரகை, மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் தற்போது வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் கதாநாயகி.

கடந்த 2018-ல் ‘தடாக்’ இந்திப் படத்தின் ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி. அதன்பிறகு, கார்கில் போரில் வீரமாகப் போர்புரிந்த இந்திய விமானப் படையில் விமானியாகவும் பெண் அதிகாரியும் குஞ்சான் சக்சேனாவின் வாழ்க்கை வரலாறு அதே பெயரில் ஹிந்தியில் தயாரகி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. அதில், குஞ்சான் சக்சேனாவாக கதாநாயகியாக நடித்திருந்தார் ஜான்வி. அதற்கு பாராட்டுக்கள் குவிந்தன.



தற்போது, 'கோலமாவு கோகிலா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயன்தாரா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். கூடவே முக்கிய முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். ‘குஞ்சான் சக்சேனா’ போட்டுத் தந்தை பாதையில், இனி பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ரீமேக் படங்களில் மட்டும் நடிப்பது என்று முடிவெடுத்திருப்பதாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு மலையாள வெற்றிப்படமான 'ஹெலன்' ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். தன்னுடைய முடிவுக்கு உடனே பலன் கிடைத்திருப்பதாக குதூகலிக்கிறார். ஆனால், தமிழில் நடிக்க வருவதுபற்றி இதுவரை அவர் மூச்சு விடவில்லை. ஆனால், அஜித்தின் ரசிகர் ஒருவர், அஜித்தை வைத்து வரிசையாக தமிழ்படம் தயாரித்து வரும் ஜான்வியின் அப்பாவான போனி கபூரை ட்விட்டரில் டேக் செய்து, ‘Dear valimai producer, Will you cast Janvi opposite on Thala Ajith 61st?' என்று கேட்டுள்ளார். அதற்கு போனி கபூர் பதிலளிக்கவில்லை. அதேநேரம் அந்தக் கேள்வியை நீக்கவும் இல்லை. யார் கண்டது அஜித்தின் அடுத்த படத்தில் ஜான்வி கபூர் இடம்பெற்றால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சினிமாவில் எதுவும் நடக்கலாம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction