free website hit counter

பெற்றோர் மீது விஜய் அதிரடி வழக்கு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தன்னுடைய பெயரை எக்காரணம் கொண்டும் கட்சி அரசியலில் பயன்படுத்தக்கூடாது என்று தனது அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அம்மா ஷோபா சந்திரசேகருக்கும் தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டிஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், “எனது கட்சிக்காரரான நடிகர் ஜோசப் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் மற்றும் அவர் நடத்திவரும் விஜய் மக்கள் இயக்கதின் செயல்பாடுகள் மூலம் அரசியலிலோ பொது அமைதியின் மீதோ ஏற்படும் எந்தவொரு விளைவுக்கும் விஜட் பொறுப்பேற்க மாட்டார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த நோட்டீஸில் ‘விஜயின் முன்அனுமதி பெறாமல் 'அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற மற்றொரு அமைப்பையும் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கும் தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்புமில்லை’ எனவும் குறிப்பிட்டிருந்தார். தவிர ‘தனது தந்தை கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் என்பதற்காக, தன் ரசிகர்கள் ஒருபோதும் தங்களைக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம்’ என விஜய் வேண்டிக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால், தொடர்ந்து தனது தந்தை உட்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரைப் பயன்படுத்தி வருவதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று, தற்போது சென்னை 15-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சிவில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். இது விஜய் ரசிகர் வட்டாரம், அரசியல் வட்டாரம் ஆகியவற்றில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: