free website hit counter

படப்பிடிப்புக்கு மகனை வரவழைத்த தனுஷ்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இருமுறை தேசிய விருது பெற்றவரான நடிகர் தனுஷும் ஐஷ்வர்யா ரஜினி காந்தும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

கணவன் - மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்தாலும் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்கு அம்மா அப்பா என்ற உறவில் இருந்து இருவரும் விலகுவதில்லை எனவும் உறுதியாக தெரிவித்து இருந்தனர். மேலும் மகன்கள் இருவரும் தற்போது தாய் ஐஷ்வர்யா பராமரிப்பில் தான் இருக்கிறார்கள். தனுஷ் ஒரு பக்கம் ஹைதராபாத்தில் 'வாத்தி' படப்பிடிப்பு மற்றும் ஊட்டியில் செல்வராகவனின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு என மாறி மாறி நடித்து கொண்டிருக்கிறார்.

இதில் 'வாத்தி படப்பிடிப்பின் பிரேக்கின் போது ஊட்டியில் 'நானே வருவேன்' படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அப்போது தனுஷின் மூத்த மகன் யாத்ரா அவரை பார்க்க வேண்டும் என விரும்ப உடனே ஊட்டிக்கு வரவழைத்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் தனுஷ் தற்போது இணையத்தில் பகிர அது வைரலானது. 'இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்' எனவும் தனது பதிவில் இது குறித்தும் நெகிழ்ச்சியுடன் அப்பாவான தனுஷ் பகிர்ந்து நெகிழ்ந்திருந்தார். மேலும், ஊட்டியில் உள்ள முக்கிய இடங்களுக்கு மகன் யாத்ராவை தனுஷ் அழைத்துச் சென்றிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: