free website hit counter

‘தலைவி’ படம் வெளியாவதில் சிக்கல்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் - அரவிந்த் சாமி நடித்துள்ள தலைவி திரைப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தனர்.

ஆனால், ‘தலைவி’ படத்தை வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளர். திரையரங்குகளில் வெளியான 14 நாட்களுக்குப் பின் நெட்பிளிக்ஸில் இந்திப் பதிப்பும் அமெசானின் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட இருக்கிறார்கள். இது திரையரங்க வசூலை பாதிக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட ஒப்புக் கொண்டால் மட்டுமே திரையரங்குகளில் படங்களை வெளியிடப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் இருந்து வருவதை அடுத்து திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகள் நடத்தப்படலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் பல முக்கியமான திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு ‘தலைவி’யை நிராகரித்துள்ளனர். தற்போது தலைவி பஞ்சாயத்து நடப்பதற்கு படம் படு சுமாராக இருப்பதும் ஒரு காரணம் என படம் பார்த்தவர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction