ஆந்திராவின் முன்னணி நடிகர்களான பவண் கல்யாண், அவருடைய அண்ணன் சிரஞ்சீவி ஆகியோர் அடுத்தடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் நிர்வாகத் திறமையைப் பாராட்டி வருகிறார்கள்.
முன்னதாக பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்வதாக புகழாரம் சூட்டியிருந்தார். அவர் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ''அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், மாநிலத்திற்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்'' என்று அழகு தமிழில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, வாழ்த்தியதுடன் கொரொனா நிவாரண நிதித்து 50 லட்சம் கொடுத்துள்ளார். நன்கொடை கொடுத்ததை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளாராம். இந்த சந்திப்பின் போது நடிகரும் சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். சிரஞ்சிவீ நன்கொடை அளித்ததன் பின்னணியில் அவருடைய மகன் ராம்சரண் நடிப்பில் ‘ஆர் ஆர் ஆர்’ உட்பட பல படங்கள் தமிழ் நாட்டில் வரிசையாக வெளியாக வேண்டியிருப்பதால் இப்படி தாஜா செய்கிறார்கள் என்று கூறிகின்றனர். அதேபோல், பவண் கல்யாணின் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் நேரடி தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருவதும் அவரது போற்றிப் பாடலுக்கு காரணம் என்கிறார்கள்.