free website hit counter

தமிழ் சினிமாவுக்கு ஒரு நவீன இசையமைப்பாளர்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சொந்த பட நிறவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கத்தில், இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரோபர்ட்டோ ஜஜ்ஜாரோ ஒளிப்பதிவில், ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று வெளியானது 'பூமிகா' திரைப்படம்.

இப்படம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளியாகிய 25-ஆவது படம் மற்றும் முதல் இயக்கும் எக்கோ ஹாரர் திரில்லர் ( Eco Horror )படமாகும். காடும் காடு சார்ந்த பின்னணியை கதைக்களமாக கொண்ட இந்தப் படத்திற்கு சர்வதேச தரத்திலான இசையமைத்து ரசிகர்களை தன் பக்கம் கவனம் ஈர்த்திருக்கிறார் இசை அமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை இசையுலகிற்கு இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி போன்ற நான்கு மொழியில் வெளியாகிய இப்படம் தற்பொழுது நெட்டபிலிக்ஸில் முதலாவது இடத்தில் ஹிந்தி பதிப்பும் ஐந்தாவது இடத்தில தமிழ் பதிப்பும் இடம் பெற்று படத்தின் குழுவினரை மகிழ்வித்துள்ளது. இவர் பெற்ற அனுபவமும், இசைத்துறை குறிப்பாக திரையிசை குறித்த இவரது விசாலமான - வித்தியாசமான பார்வையும் ரசிகர்களை இவரை நோக்கி தங்கள் பார்வையை திரும்ப வைத்திருக்கிறது. இதற்கு 'பூமிகா' படம் சான்றாக இருக்கிறது. மேலும் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் உருவாக்கிய கற்பனை கலை படைப்பான 'பூமிகா' படத்தின் கதையையொட்டி இவர் அமைத்திருக்கும் இசை, படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பது உறுதி. ப்ரித்வி சந்திரசேகர் அனலாக் தொகுப்புடன் கனரக ஓர்செஸ்ட்ரஷனை இணைத்து ஒரு ஜனரஞ்சகமான பின்னணி இசையை அமைக்க முயன்றிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

பல புது சௌண்ட்ஸ்கேப் என்று அழைக்க படும் ஒலி தொகுப்புகளை உருவாக்கி பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை முழுதும் அனலாக் ஒளியுலகத்தை சார்ந்தே இருக்கும். படப்பிடிப்பின் பொழுதே பல இசை குறிப்புகளை அமைத்ததால் படத்தின் கருவையும் அதன் சாரம்சத்தையும் அழகாக வெளிகொண்டுவரமுடிந்ததாக கூறுகிறார் .தனது குழுவான -இயக்குனர் ,ஒளிப்பதிவாளர் மற்றும் தொகுப்பாளருடன் இருந்த ஒத்திசைவு, பல புது யோசனைகளுக்கு உத்வேகமாக இருந்துள்ளது என்கிறார். இதனிடையே ‘பூமிகா’ படத்தில் இசையமைப்பாளர் ப்ரித்வி சந்திரசேகர் இசையில் பாடலாசிரியர் கதிர்மொழி எழுதிய ‘மண்ணென்னும் மாய தீ..‘ எனத் தொடங்கும் பாடலை பின்னணி பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா பாடியிருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula