free website hit counter

சிவகார்த்திகேயன் - கௌதம் மேனன் கூட்டணி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’படம் முடிந்து திரையரங்க வெளியிட்டுக்காக காத்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு சென்சாரும் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. இன்னொருபக்க்கம், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயலான்’ அறிவியல் புனைவுப் படம். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. ஆனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

தற்போது புதுமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில்‘டான்’என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் டாக்டர் படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் மீண்டும் கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை துவங்கவும் இருப்பதாக தகவல்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction