free website hit counter

அஜித்துக்குப் பிடித்த கால்பந்து ஆளுமை யார்?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சினிமா, கிரிக்கெட், கால்பந்து என மூன்றில் எந்தப் பொழுதுபோக்காக இருந்தாலும் ரசிகர்கள் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்வதும் தங்கள் அபிமான பிரபலத்தைக் கொண்டாடுவதும் உலகம் முழுவதுமே உண்டு.

தங்களுடைய ஆதர்ஷ நாயகன் தான் சிறந்தவர் என மோதிக் கொள்பவர்கள் பல சமயங்களில் எல்லை மீறிச் சென்றுவிடுவதும் உண்டு. அப்படி உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை இரு பிரிவுகளாக பார்த்தால் ஒன்று ரொனால்டோ ரசிகர்களாகவும் மற்றொன்று மெஸ்ஸியின் ரசிகர்கள் குழுவாகவும் இருப்பார்கள். எதற்கு இந்த கால்பந்து புராணம் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது!

மில்லியன்களில் ரசிகர்களை ஈர்த்த தல அஜித், ஒரு பன்முகக் கலைஞர். திரை நடிப்பு மட்டுமல்லாது கார் மற்றும் பைக் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் விமானங்கள் மற்றும் குட்டி விமானங்களை உருவாக்குதல் மற்றும் இயக்குதல் என தனது திறமைகளைக் காட்டி வருகிறார். அதேவேளை தல அஜித் ஒரு தீவிரக் கால்பந்து ரசிகரும் தான். தல அஜித்துக்குப் பிடித்த உலகக் கால்பந்து அணி எது என்பது தெரிய வந்துள்ளது.

ரொனால்டோ பங்கு வகிக்கும் மான்செஸ்டர் அணிக்கு அஜித்தும் சிறந்த ரசிகர் என்பது ஒரு புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது. தனது ரசிகர்களுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் தொப்பியை அணிந்து கொண்டு அஜித் நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அஜித்தும் ரொனால்டோவின் ரசிகர் என சமூக வலைதளங்களில் பரவலாக தல ரசிகர்கள் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: