free website hit counter

மாப்பிள்ளை ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனர் அருண் விஜய்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாமி, சிங்கம் பட வரிசைகளை இயக்கி, கமர்ஷியல் கிங் என்று பெயரெடுத்தவர் இயக்குநர் ஹரி.

இவர் நடிகர் அருண் விஜயின் தங்கையும் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளுமான ப்ரிதா விஜயகுமாரை மணந்தவர். நீண்டகாலமாக மாப்பிள்ளையும் மைத்துனரும் இணையும் கூட்டணி பற்றி பேசப்பட்டு வந்த நிலையில் தற்போதுதான் முதல் முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு இப்போதைக்கு #AV33 என்று பெயர் வைத்துள்ளனர். இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு வேடத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பது வழக்கம். தற்போது #AV33 படத்திற்கும் அருண்விஜய்யின் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநியில் பரபரப்பாக நடந்து வருகிறது. சுமார் 45 நடிகர் நடிகைகள் மற்றும் 100-க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். #AV33 பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அவர் டைரக்டர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார். எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்தோடு நான் வாங்கிய அட்வான்ஸை திரும்ப தந்து விடுகிறேன். நாம் அடுத்த படத்தில் இணைவோம் என்று பிரகாஷ் ராஜ் கூறியதை தொடர்ந்து, எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக சமுத்திரகனி நடித்து வருகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction