free website hit counter

‘தரமணி’வசந்த் ரவியின் கலைந்துபோன கனவு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னையில் மிகவும் பிரபலமான சங்கிலித் தொடர் உணவங்களில் ஒன்று ‘வசந்த பவன்’.

இந்நிறுவனத்தின் உரிமையாளருடைய மகன் தான் வசந்த் ரவி. ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் கதாநாயகனா அறிமுகமானார். ஆண்ட்ரியாவுடனான இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அதன்பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தாதாவின் அடியாளாக வசந்த் ரவி நடித்துள்ள படம் ‘ராக்கி’. இது 2 வருடங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. தாதா வேடத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் வசந்த் ரவி டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். அதை தொடக்கம் முதலே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து வந்ததால், அடிக்கடி ராக்கி படம் பற்றிய செய்திகள் வெளியானது. இதனால் தரமணி போலவே ராக்கி திரையரங்குகளில் வெளியாகி, முன்னணிக் கதாநாயகர்களின் வரிசையில் தனக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தரும் என்று கனவு கண்டார் வசந்த் ரவி. ஆனால் கொரோனா அவருடையை கனவைக் கலைத்துவிட்டது.

தற்போது ‘ராக்கி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் இதை 4 கோடி ரூபாய்க்கு வாங்கி 12 கோடி ரூபாய்க்கு பிரபல ஓடிடியில் விற்றுவிட்டார்களாம், இதனால், படத்துக்குப் போட்ட முதலீடு மட்டுமே வசந்த் ரவிக்கு திரும்பக் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction