free website hit counter

ராஷ்மிகாவை வம்புக்கு இழுத்த விஜய் தேவரகொண்டா ரசிகர்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுல்தான், புஷ்பா ஆகிய படங்களுக்கு பின் தற்போது படப்பிடிப்புகள் எதிலும் கலந்து கொள்ள முடியாமல் வீட்டில் முடங்கியிருக்கிறார் தென்னிந்தியாவின் பிரபல கதாநாயகி ராஷ்மிகா மந்தன.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுல்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன்னுடைய அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிந்து தன்னுடைய ரசிகர்களுடைய அனுதாபங்களை அள்ளியிருந்தார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை அதிக உயிர்களை பலி கொள்வது குறித்து தன்னுடைய முகநூல் பதிவில் ராஷ்மிகா செய்துள்ள பதிவுக்கு லைக்குகள் லட்சங்களில் குவிந்து வருகின்றன. அவர் தன்னுடையகாணொளிப் பதிவில் “ நம்ப முடியாத எதையும் கணிக்க முடியாத இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் சவால் விடுகிறது கொரோனா எனும் கொடிய கிருமி. கரோனா மீண்டும் பரவுகிறது என்பதை நம்பவும் அதை ஜீரணிக்கவே எனக்கு சிறிது காலம் பிடித்தது. நேர்மறையான மன ஓட்டத்துடன் இருப்பதே இந்த போரில் நாம் உயிர் பிழைத்து வாழ்வதற்கான ஆயுதம். இந்தக் காலத்தில் நல்லது செய்துவரும் பல நிஜ ஹீரோக்களின் கதைகளை உங்களுடன் பகிருகிறேன் அதற்காக காத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஒரு ரசிகர், ‘உங்களுடன் நடித்தவர்கள் எல்லாம் ஹீரோக்கள் அல்ல; மக்களுக்கு உதவி செய்பவர்கள் ஹீரோக்கள் என்று கூற வருகிறீர்கள் என்பது புரிகிறது. அப்படியானால் எங்கள் அண்ணன் விஜய் தேவரகொண்டாவை வாழ்க்கையிலும் ஹீரோ என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?’ எனக் கேட்டு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ராஷ்மிகாவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: