free website hit counter

20 வருடங்களுக்குப் பின் பாலாவுடன் இணைந்த சூர்யா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘சூரரைப் போற்று’ படத்தின் மூலம் சிறந்த நடிப்புக்காக பாராட்டப்பட்ட சூர்யாவின் நடிப்பில் தற்போது, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

இவற்றுள் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகிறது. பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை சன் டிவி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராக நடிக்க உள்ளார் சூர்யா. இந்த இரு படங்களுக்குப் பிறகு தன்னுடைய படம் என்ன என்பதையும் இப்போதே முடிவு செய்து அறிவித்துவிட்டார் சூர்யா. அது பாலா இயக்கத்தில் நடித்த ‘நந்தா’ வெளியாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்து பணிபுரிய இருக்கும் அறிவிப்பு ஆகும். இதுபற்றி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சூர்யா இட்டுள்ள பதிவில்ள்:

“என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அதிரடியாக இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு சைக்கோதனமான படத்தைக் கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இதுபற்றி விவாதிக்கத் தொடங்யுள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction