free website hit counter

‘எனிமி’ பிரஸ் மீட்டில் விஷால் பேசியவை!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'.

இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் சி.எஸ். இசையமைக்கிறார் .படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது

விஷால் பேசியவை

என்னுடைய நல்ல நண்பர் புனித் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முதலில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப்பெரிய பலம் அவர்தான். அவர் நினைத்திருந்தால் இப்படத்தை ஓடிடியில்வெளியிட்டு அதிக லாபத்தை பார்த்திருக்கலாம். திரையரங்கில் மக்கள் ரசிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா ஒரு ஒரு ஜாலியான மனிதர். கடின உழைப்பாளி படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பாக்ஸர் போல உண்மையாகவே என்னை அடித்துவிட்டார் அடுத்து அவருடன் நான் எப்போது படம் நடிப்பேன் என ஆவலாக உள்ளேன்.

நடிகர் ஆர்யா பேசியவை

இப்படத்தைப் பற்றி என்னிடம் முதலிடம் கூறியவர் விஷால். கதை கேட்கும்படி சொன்னார் .நானும் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கேட்டவுடன் இரண்டு கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது .எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது ;என்று ஒரு குழப்பம் நிலவியது எனக்கு. படத்தில் எனக்காக சிறப்பு காட்சிகளும் மாஸ் காட்சிகள் அதிகமாக ;வைக்க சொல்லி விஷால் கூறியுள்ளார் .வேறு யாரும் இப்படி சொல்வார்களா என்று எனக்கு தெரியவில்லை .நன்றி. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை நானும் விஷாலும் பார்த்தோம் .இப்படி ஒரு காட்சி இனி எங்களால் மீண்டும் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மிகப்பெரிய பலம் .இப்படத்தின் காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்க வேண்டியிருந்தது .கொரோனா காரணமாக எடுக்க முடியவில்லை .அதனால் துபாயில் படத்தை எடுக்க முடிவு செய்தார் .துபாயில் எடுத்தால் மூன்று மடங்கு செலவாகும் என தெரிந்தும் எடுக்க முன்வந்தார். தீபாவளிக்கு ரஜினி சாரின் படத்துடன் இப்படம் வெளியாகிறது .கண்டிப்பாக அனைவரும் திரையரங்குகளில் படத்தை பாருங்கள் நன்றி. இயக்குனர் ஆனந்த் சங்கர் பேசியவை, எனது முந்தைய இரு படங்களில் பசங்களை விட இப்படத்தில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். கண்டிப்பாக இந்த பாராட்டு ஷான் அவர்களுக்கு ;போய் சேரும். நடிகை மிர்னாலினி ரவி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் .அவர் டிக் டாக் வீடியோக்கள் நிறையவே பார்த்து ரசித்து இருக்கிறோம் .அவரால் கண்டிப்பாக நடிக்க முடியும் என்று நம்பி படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம் .அவர் டான்ஸர் கூட. இப்படத்தின் பாடல்களை தமன் இசையமைத்துள்ளார் பின்னணி இசையை சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் .கைதி, விக்ரம்வேதா படத்தின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்த பின்னணி இசை. அதனால் இப்படத்திற்கும் அவர்தான் பின்னணி இசை அமைக்க வேண்டும் என நினைத்தோம் .அதேபோல் எதிர்பார்ப்புகளை தாண்டி படத்தின் பின்னணி இசை அருமையாக வந்துள்ளது. இப்படம் சுலபமாக தற்போது வெளியேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் வினோத் ,மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார் .அவர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை. விஷால் சாருக்கு ஆக்சன் அதிக காட்சிகள் வைக்க வேணுடும் என்று பலர் கேட்டுக்கொண்டதால் அவருக்காக சில சிறப்பு ஆக்ஷன் காட்சிகளை படத்தில் வைத்துள்ளோம். ஆர்யா கடின உழைப்பாளி .மிகவும் எனர்ஜியான நடிகர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RD சார் ஒளிப்பதிவுக்காக ;தனி பாராட்டைப் பெறுவார். தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறோம்.

நடிகை மிருணாளினி ரவி பேசியவை,

எனது திரையுலக பயணத்தில் தொடக்க காலத்திலேயே இப்படி ஒரு மிகப்பெரிய படம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது .என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த ஆனந்த் ஷங்கர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் சார் அனுபவம் வாய்ந்த மிகப்பெரிய நடிகர். எனக்கு கூச்சமாக பயமாக தான் இருந்தது. ஆனால் எளிய மனிதரை போல் என்னிடம் பழகினார். ஆர்யா சாருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது .இப்படத்தில் ;அழகான பாடல்களை கொடுத்த தமன்அவர்களுக்கு நன்றி .தீபாவளிக்கு இப்படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction