free website hit counter

‘இந்தியன் 2’பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது இப்படித்தான்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய சினிமாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று புகழ்பட்டு வருபவர் இயக்குநர் ஷங்கர். இவர் கலைஞானி கமல்ஹாசனை வைத்து உருவாக்கிய இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதுபோல கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டது. இதனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை 'இந்தியன் 2' என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வந்தார். அதில் கமல் இந்தியன் தாத்தாவாக நடிக்க, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வந்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த உதவி இயக்குநர் உட்பட 3 பேருக்கு தலா ஒரு கொடி இழப்பீடு கொடுத்தது தயாரிப்பு நிறுவனமான லைகா. அதன்பின்னர், முதல் அலை கொரோனா பரவல் சாவாலான அளவில் அதிகரித்த காரணத்தால், ஊடரங்கு அமல்படுத்தபட்டத்தில் படப்பிடிப்பு நின்றுபோனது.

மீண்டும் இந்தியன் 2 எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் பட்ஜெட் தொடர்பாக, ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் தரப்புக்கு ஒத்துழைக்க மறுத்தார். இதனால் லைகா நிறுவனம் ஷங்கர் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கு இழுத்துக்கொண்டே சென்றதில் இந்தியன் 2 படம் எப்போது தொடங்கும் என்று தெரியாததால், இயக்குநர் ஷங்கர், தெலுங்கு ஹீரோ ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாயின..

இதையடுத்து ’இந்தியன் 2’ திரைப்படத்தை நிறைவு செய்யாமல், மற்ற திரைப்படங்களை இயக்க ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் தனது வழக்கில் ஷங்கருக்கு தடைகோரியது. அதேபோல் தெலுங்கானா உயர்நீதி மன்றத்திலும் ஷங்கருக்கு எதிராக லைகா வழக்குத் தொடர்ந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நீதிமன்றம் நியமித்தது. இதிலும் தீர்வு காணப்படாத சூநிலையில் லைகா நிறுவனர் சுபாஷ்கரன், இயக்குநர் ஷங்கரை சமீபத்தில் சந்தித்ததாகவும் அப்போது ‘இந்தியன் 2’ பிரச்சனை குறித்து இருவரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்தியன் 2 படத்தை எப்போதும் தயாராக இருப்பதாக ஷங்கர் ஒப்புக்கொண்டதால் சமாதானப் பேச்சு வார்த்தை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. சமதானம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ஷங்கர் மீது லைகா தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற்றுவிடுவதாக சுபாஷ்கரன் உறுதி அளித்ததாகவும் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் லைகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தை முடித்த கையோடு ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction