free website hit counter

விமான நிலையங்களுக்கு அருகே 5G கோபுரங்கள் அமைக்க தடை - மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவில் 5G சேவையை கடந்த அக்டோபர் 1-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5G சேவை வழங்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. விமான கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5G சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுரங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையைக் கொண்ட 5G சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: