திறமையான நபர்களை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்வடவசமானது.
இந்நிலையில் அண்மைக்காலமாக ஓயோ நிறுவனம் கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை சரிசெய்யும் வகையில் ஓயோ நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து ஓயோ நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறுகையில்,
"திறமையான நபர்களை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்வடவசமானது. இருப்பினும் ஓயோ நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பெற்று, எதிர்காலத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் போது, அவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    