free website hit counter

பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்த கப்பலில் பெருந்தொகை ஹெரோயின் கண்டுபிடிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கப்பலின் குளிர் கொள்கலன் பெட்டியொன்றில் இருந்தே இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கப்பலொன்றில் சுமார் 65 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் இலங்கை சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின், 16,193 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

துறைமுக சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நீண்ட விசாரணையின் போது, ​​கப்பலின் குளிர் கொள்கலன் பெட்டியொன்றில் இருந்தே இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த போதைப்பொருள் பொதிகள் மற்றும் சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: