கோட்டா, மஹிந்த, பசிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு யார் பொறுப்புக்கூறவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கெப்ரால் உட்பட பலர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களை கண்டறிந்து தீர்வு காண்பதற்கும், இந்நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தவும் அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறு கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உள்ளிட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லவே உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.