மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட புத்தல பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 3.2 ரிச்டர் அளவில் இன்று (22) புதன்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கிறது.
எனினும் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
இந்தப் பிரதேசத்தில் 3 ஆவது முறையாக பதிவான நிலநடுக்கம் இதுவாகும்.