free website hit counter

இன்று 173 சிறை கைதிகளுக்கு விடுதலை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அபராதம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக 141 கைதிகளையும், 14 நாட்கள் குறைக்கப்பட்டதால் 32 கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குருவிட்டை, மஹர, நீர்கொழும்பு, வாரியபொல, போகம்பறை, அனுராதபுரம், களுத்துறை, கொழும்பு மெகசீன் சிறைச்சாலை, தல்தென, வட்டரெக, பதுளை, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலன்னறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேன, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல, திருகோணமலை மற்றும் வீரவில ஆகிய சிறைச்சாலை கைதிகளே விடுவிக்கப்படவுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: