free website hit counter

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு கொரோனா உறுதி - புனே பயணம் ஒத்திவைப்பு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐ.பி.எல்.லில் டெல்லி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அணியின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் இன்று அவர்களது அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோ ஃபர்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இந்நிலையில் தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: