free website hit counter

மக்களின் போலீஸாக ‘வலிமை’ அஜித் : முன்னோட்டக் காணொளி

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹெச். வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்த அஜித், மீண்டும் வினோத் இயக்கத்தில் நடித்திருக்கும் படம்‘வலிமை’.

இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ‘காலா’ புகழ் ஹுமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் இப்படத்தின், முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

விரைவில் வலிமை படத்தின் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் ‘கிளிம்பஸ்’ என்ற பெயரில் அஜித் படத்தில் ஸ்டண்ட் செய்துள்ள சில காட்சிகள் உட்பட, ‘மக்கள் போலீஸின் ஆக்‌ஷன்’ என்ற தலைப்புடன் வெளியானது. இதனால் அஜித் ரசிகர்கள் #ValimaiGlimpse என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction