free website hit counter

திருக்கோணேஸ்வரர் கல்வெட்டு இலன்டனில்  கண்டறியப்பட்டது !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே என ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடித் துதித்த தலம் திருக்கோணேஸ்வரம்.  

இக் கோவிலுக்கு, சோழ மன்னன் குளக்கோட்டன் திருப்பணி செய்து நிவந்தமளித்த கல்வெட்டு (ஒலைச்சுவடி) வரலாற்று  ஆவணம் ஒன்று இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலண்டன் பல்கலைக்கழக மாணவன் டிவிஷன் நேரடியாக அருட்காட்சியகம் சென்று, அனுமதி பெற்று, இச்சுவடிகளை நேரில் பார்த்து பதிவு செய்துள்ளார். இதனை டிஜிட்டல் பதிவாக மாற்றும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Sir Henry Wellcome பிரபுவினால் பணிக்கமர்த்தப்பட்ட Dr.Paira Mill இனால் இது 1910-1936 ஆண்டளவில் சுமார் 10,000 கி.மி. தாண்டி திருகோணமலையிலிருந்து இங்கிலாந்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என அறியமுடிகிறது.  இக் கல்வெட்டுச் சுவடிகளின் ஒரு பகுதியே  இச் சேமிப்பில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula