திருக்கார்த்திகை தீப ஒளித்திருநாளாம் இன்று. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகன் அவதரித்தார் என்பார்.
ஜோதியே வடிவான சிவபிரானின் அருளால் நெற்றிக்கண்களின் தீப்பொறியில் உருவானவன் கந்தன் ஈசானம்; தற்புருசம் அகோரம் வாமதேவம் சத்ஜோதாசம் எனும் சிவனின் ஐந்து முகங்களிலும் தோன்றிய ஐம்பொறிகளுடன் மேல் நோக்கிய அதோ முகத்திலுருந்து தோன்றிய ஆறாவது பொறியையும் சேர்த்து ஆறு பொறிகள் அக்னியாலும் வாயுவாலும் அணைக்க முடியாத அவ்வளவு வெப்பம் சூரியனையும் மிஞ்சும் ஒளியும் சூடும் பொருந்திய ஆறுபொறிகளையும் மாற், மாறி அக்னியும் வாயும் கங்கை ஆற்றில் விட்டனர்.
கங்கை அப்பொறிகளை சரவணப் பொய்கையில் ஆறு தாமரைமலர்கள் மீது விட்டுச்சென்றாள் பொறிகள் ஆறும் குளிர்ந்து குழந்தைகளாய் தவழ்ந்தன. ஐம்பூதங்களினால் ஏந்தி தாங்கி தூங்கி வளர்ந்தான் சரவணன். கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தனர்.
சிவனும் உமையும் அங்கு வந்து ஆறுமுகங்களையும் சேர்த்தனைக்க ஆறுமுகமும் ஒருமுகமானான். குமரன், அழகன், தமிழன் கந்தன் , முருகன்
கார்த்திகேயன் இப்படி பலவாறு போற்றி வழிபடப்பட்டான்; என்றும் இளமையானவன் குமரன் அவனால் எமக்குக் கிடைத்தது தமிழ்,தமிழன் என்று வர்ணிக்கப்படும் கந்தன் அழகே உருவானவன், நால்வேதங்களின் பொருளை தந்தைக்கே போதித்தவன். அதனால் ஸ்வாமி நாதன் எனப்பெயர் பெற்றவன்
அசுரரை வென்று தேவசேனாதிபதியாய் விளங்கி தேவர்துயரைப் போக்கியவன்.
கலியுகத்தெய்வம் என்றும் போற்றி வழிபடும் ஆறுமுகன் சக்தி கொடுத்த வேலால் அரக்கரை அழித்து, தேவரைக் காத்து வடிவேலனாக சக்திவேலாக எமக்கெல்லாம் அருள் புரிகின்றான். அப்படிப்பட்ட சுப்பிரமணியனை நினைந்து இன்று திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்றி வழிபடுவோம். நாளை விஸ்ணுவுக்கும் சர்வ ஆலயங்களிலும் அருள்வீற்றிருக்கும் விநாயகர் ,சிவன் அம்மன் வைரவர் இப்படி அனைத்து தெய்வங்களுக்கும் தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் செய்வது வழக்கம். வீடுகளிலும் அந்நாளில் தீபம் ஏற்றுவர். நாம் எமது வீடுகளிலும் மாலைநேரம் இருள் நீக்கி இல்லம் எங்கும் ஒளித்தீபம் ஏற்றி வழிபடுவோம். அக இருளும், புற இருளும் நீக்கிட உள்ளத்தில் இறை ஒளி பரவ இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்.
அகல் விளக்கு
அகல் ,எண்ணெய் ,திரி ,சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகா லக்ஷ்மி குடியிருப்பாள். அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம் பூதங்களைக் அதாவது மண்,நீர், நெருப்பு,காற்று ,ஆகாயம்) கொண்டு செய்யப்படுகிறது. அவர் களிமண்ணில் நீரை ஊற்றி ,சூரிய ஒளியில் காய வைத்து ,காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான். அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள். அத்தோடு
அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது .நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம்.இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.
எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. மேலும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 விளக்குகள் வீட்டில் ஏற்றுவது சிறந்தது.
கணபதி - தேங்காய் எண்ணெய்
முருகன் - நெய் தீபம்
நாராயணன் - நல்லெண்ணெய்
மகா லக்ஷ்மி - நெய்
அம்மன் - 5 கூட்டு எண்ணெய்
குல தெய்வம் - இலுப்பை எண்ணெய்
இறைவனே தன்னொளியால் ஒரு புத்தொளியை உருவாக்கி துன்பமதை போக்கி இன்பத்தை தந்தான். என்றால் நாமும் எம்துயர்கள் மறைய எங்கும்
ஒளியேற்றி நம்பிக்கை ஒளிபரவ ஏற்றம் பெறுவோம்.
Source : Aanmeegam