ஆடி மாத கன்னி இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
17-07-2025 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-07-2025 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-07-2025 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
03-08-2025 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிக்கும் கன்னிராசியினரே எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
பெண்கள் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.
பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு சாதகமான காலமிது. பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விளைச்சல் அமோகமாக இருக்கும். விற்பனையின் போது கவனம் தேவை.
மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும். விளையாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;
பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வர வாழ்வு வளம் பெறும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் புருஷோத்தமாய நம:” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை கூறவும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 18, 19, ஆக 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 08, 09
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast
)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: