free website hit counter

மீண்டும் UFO மர்மம்! : அமெரிக்க நேவி எடுத்த புகைப்படத்தில் தெரிவதென்ன?

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் ஊடகங்களில் வெளியான 2020 ஆமாண்டு ஏப்பிரல் 26 ஆம் திகதி அமெரிக்க நேவி பைலட்டுக்களால் எடுக்கப் பட்ட புகைப்படம் ஒன்றில் மீண்டும் UFO எனப்படும் அடையாளப் படுத்தப் படாத பறக்கும் பொருள் சர்ச்சை கிளப்பப் பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் தெரியும் பறக்கும் டிஸ்க் போன்ற பொருளானது எந்தவித உந்து விசையோ, காற்றாடியோ இன்றி பறக்கும் நிலையில் உள்ளது.

இது ஒரு பறவையா? விமானமா? சூப்பர் டிரோனா? அல்லது வேற்றுக்கிரக வாசிகளது ஓடமா? எனப் பல ஊகங்கள் தற்போது கிளப்பப் பட்டுள்ளன. ஏற்கனவே இது போன்று பல தடவை சர்ச்சையைக் கிளப்பும் UFO கள் குறித்த புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கமானத் இந்த UFO கள் குறித்து பொது மக்களுக்கு இந்த மாதம் விளக்கம் அளிக்கவிருப்பதாகத் தெரிய வருகின்றது.

அமெரிக்க கப்பற் படையின் இந்த பறக்கும் மர்மப் பொருள் குறித்த ஆவணப் புகைப் படம் மற்றும் வீடியோக்கள் குறித்து முக்கிய அறிக்கை விரைவில் தெரிவிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை 1960 களிலேயே அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA இன் தகவல் படி 13 வருடங்களில் சுமார் 6500 பறக்கும் பொருட்கள் குறித்து அமெரிக்க விமானப் படைக்கு முறைப்பாடு அளிக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வானியல் அறிஞர்களது கூற்றுப் படி உலகில் பொது மக்களால் UFO கள் என்று கருதப் படும் பொருட்களில் 95% வீதமானவை விமானங்கள் போன்ற மனிதனின் பறக்கும் பொருட்கள் அல்லது செய்மதிகள், விண்கற்கள், கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்கள் அல்லது இயற்கை நிகழ்வுகளாகவே இருப்பது பின்பு அறியப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction