வெள்ளிக்கிழமை இரவு மத்திய மற்றும் கிழக்கு சீனாவை அடுத்தடுத்து தாக்கிய டோர்னிடோ சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 10 பேர் கொல்லப் பட்டும், 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
கோவிட்-19 பெரும் தொற்று ஆரம்பித்த மத்திய சீனாவின் வுஹான் நகரில் 6 பேரும், கிழக்கே ஜியாங்சு மாகாணத்தின் ஷெங்ஷே நகரில் டோர்னிடோவுக்கு 4 பேரும் பலியாகியுள்ளனர்.
ஷங்காய் நகருக்கு அருகே சீனாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் ஷெங்ஷே மற்றும் வுஹான் ஆகிய நகரங்களில் இந்த டோர்னிடோ புயலால் பல வீடுகள் சேதமடைந்தும், மின்கம்பங்கள் உட்பட உள் கட்டுமானங்கள் கடும் சேதத்தினை சந்தித்தும் உள்ளன.
மறுபுறம் வெள்ளிக்கிழமை காலை ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலும், மதியம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குத் தென்கிழக்கேயும் 6 ரிக்டருக்கு மேற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் தொடர்பான சேத விபரங்கள் இன்னமும் வெளியாகாத அதே நேரம் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.