free website hit counter

5 ஆவது நாளாக வலுப்பெறும் இஸ்ரேல் பாலத்தீன மோதல்களில் சிறுவர்கள் பலி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சில வாரங்களுக்கு முன்பு கிழக்கு ஜெருசலேமில் அருகருகே வசிக்கும் யூதர்களுக்கும், இஸ்லாமிய பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிக் குழுவினர் காஸாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டு தாக்குதலையும், பதிலுக்கு இஸ்ரேல் பாலத்தீன பகுதிகளில் விமானத் தாக்குதல்களையும் தொடுத்தனர்.

5 ஆவது நாளாகத் தொடரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பல பொது மக்கள் பலியாகி உள்ளனர். வெள்ளிக்கிழமை தமது தரைப்படையை பிரயோகிக்க இருப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுத்த போதும் இஸ்ரேல் இராணுவம் இதுவரை காஸாவுக்குள் நுழையவில்லை. திங்கட்கிழமை முதல் இடம்பெறும் மோதல்களில் குறைந்தது 122 பொது மக்கள் காஸாவிலும், 8 பேர் இஸ்ரேலிலும் பலியாகியுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக யூதர்களுக்கும் இஸ்ரேலி அரபு கும்பல்களுக்கும் இடையே இடம்பெறும் மோதலில் இஸ்ரேல் அதிபருக்கு உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப் பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஷ் உத்தரவின் பேரில் வன்முறையில் ஈடுபட்ட 400 இற்கும் அதிகமான மக்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காஸா சிட்டியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பெரும்பாலான சிறுவர்கள் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பாலத்தீனத்துக்கு இடையேயான சமீபத்திய மோதல்களை நிறுத்தி அமைதியை நிலை நிறுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த உலகின் மிகப் பெரும் இஸ்லாமிய தேசங்களின் வெளியுறவு அமைச்சர்களுக்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது. காணொளி வாயிலாக சுமார் 57 இஸ்லாமிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் வன்முறை மற்றும் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் இருந்து மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தனது போலிஸ் படையை பிரயோகித்திருப்பது குறித்தும் முக்கியமாக பேசப்படவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction