free website hit counter

சஹாரா தூசினால் செம்மஞ்சளாக மாறிய ஏதென்ஸ் நகரம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கீரிஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் நேற்று செவ்வாய்கிழமையிலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் காட்சி தருகிறது.

வட ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் மணல்; தெற்கிலிருந்து வீசும் பெரும் காற்றால் மேலேழுந்து அக்ரோபோலிஸ் மற்றும் பிற ஏதென்ஸ் நகரங்களில் தூசி மண்டலமாக பரவியுள்ளது. இதனால் செவ்வாய் கிரகம் போன்று பகல் நேரத்தில் அந்தப்பிரதேசம் செம்மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கிறது. எனினும் இன்று புதன்கிழமை காற்றின் போக்கு தூசியை நகர்த்துவதால், வானம் தெளிவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் நேற்றைய தினம் கீரீஸ் நாட்டின் சில பகுதிகளில் தினசரி அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதுடன் இது வடக்கு கிரீஸ் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் பருவமழை இல்லாததால் காட்டுத்தீ பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. கிரீஸ் ஒவ்வொரு கோடைகாலத்திலும் பேரழிவு தரும் காட்டுத்தீயால் பெரும்பாலான காடுகளை அழிக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக; கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய காட்டுத்தீயை அந்நாடு பதிவு செய்தது.

2018 மார்ச் மாதம் முதல் கீரிஸ் நாடு சஹாராவின் தூசி மண்டலத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவந்த மிக தீவிரமான அத்தியாயங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ஏதென்ஸ் ஆய்வகத்தின் வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து மற்றும் தெற்கு பிரான்சின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய தூசி மண்டலத்தின் தாக்கத்தை மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் கிரீஸ் சந்தித்துள்ளது.

அடிப்படை உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஆபத்துக்களை விளைவிக்கும் இந்த நுண்ணிய மாசு துகள் செறிவுகள் சூரிய வெளிச்சத்தையும் குறைக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

ஆண்டுதோறும் 60 முதல் 200 மில்லியன் டன் கனிம தூசிகளை சஹாரா பாலைவனம்  வெளியிடுகிறது. கனமான துகள்கள் விரைவாக பூமிக்கு திரும்புகின்ற அதேசமயம் சிறிய துகள்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, ஐரோப்பா முழுவதும் அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

Source : aljazeera

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction