free website hit counter

பூமியின் அளவிலான புதிய கிரகம் கண்டுபிடிப்பு

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூரியனை விட 100 மடங்கு குறைவாக பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நட்சத்திரத்தையும் அதன் பூமி அளவிலான புதிய கிரகத்தையும் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Speculoos-3b என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியிலிருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உலகம், "நடைமுறையில் நமது கிரகத்தின் அதே அளவு" என்று விவரிக்கப்பட்டுள்ளது, 

சூரியனை விட பாதி வெப்பம் மற்றும் 100 மடங்கு குறைவான ஒளிர்வு கொண்ட அதி-குளிர்ச்சியான சிவப்பு  குள்ள  நட்சத்திரத்தை சுற்றி காணப்படும் இரண்டாவது கிரக அமைப்பு இது என தெரிவிக்கப்படுகிறது. அங்கு  நட்சத்திரத்தை சுற்றி வர, சுமார் 17 மணி நேரம் எடுக்கிறதாம், இருப்பினும், பகல் மற்றும் இரவுகள் ஒருபோதும் முடிவடையாது: புதிய கிரகம் நட்சத்திர அலையுடன் பூட்டப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது, எனவே அதே பக்கம், பகல்நேரம் என்று அழைக்கப்படுவது எப்போதும் நட்சத்திரத்தை எதிர்கொள்கிறது. இரவுப் பக்கமும் முடிவில்லாத இருளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

பெல்ஜியத்தின் லீஜ் பல்கலைக்கழகத்தில் மைக்கேல் கில்லன் தலைமையிலான SPECULOOS (Search for Planets eclipsing ULtra-cOOl Stars) திட்டம் என்பது விண்மீன் மண்டலத்தில் சிதறிக் கிடக்கும் அல்ட்ரா-கூல் குள்ள நட்சத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாக, வாரக்கணக்கில் கவனித்து கண்டுபிடிப்பதாகும். இதன் ஆராய்ச்சியில் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் முக்கிய உதவியால், தொடக்ககட்டமாக TRAPPIST-1 அமைப்பைக் கண்டுபிடித்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில் ஒரு வேடிக்கையும் உள்ளது. நட்சத்திரங்களை கண்டறியும் திட்டமான "ஸ்பெகுலூஸ் (SPECULOOS )" என்பது பெல்ஜியம் நகரத்தில் உருவான பிரபல குக்கீஸ் பிஸ்கட்டின் பெயராகவும் உள்ளது.

 பிற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் பற்றிய ஆய்வில் நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். பூமியின் அளவுள்ள வெளிக்கோள்களை விரிவாகக் கண்டறிந்து ஆய்வு செய்யும் நிலையை நாம் இப்போது அடைந்துள்ளோம். அடுத்த கட்டமாக, அவற்றில் ஏதேனும் வாழக்கூடியவையா, அல்லது வசிக்கக்கூடியவையா என்பதை தீர்மானிக்க வேண்டும்,'' என்கிறார் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில், கிரகத்தை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீவ் பி. ஹோவெல்.

Source : science.nasa.gov

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction