free website hit counter

சினிமா தடை நீக்கத்தில் இருந்து திரைப்பட விழா வரை முன்னேறி இருக்கும் சவுதி!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சவுதி அரேபியாவில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் சினிமாப் படங்களுக்கான தடை நீக்கப் பட்டிருந்தது.

இந்த 4 வருடங்களில் உலகின் கவனம் பெறும் மிக முக்கிய சர்வதேச திரைப்பட விழா (Film Festival) ஒன்றிட்கு சவுதி அரசு தலைமை தாங்குகின்றது. ஜெத்தா நகரில், சிவப்பு கடல் திரைப்பட விழா என அழைக்கப் படும் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள திரைப்பட விழா இன்று திங்கட்கிழமை தொடங்குகின்றது.

முதன் முதலாக சவுதியில் சிவப்புக் கம்பள வரவேற்பின் மூலம் சர்வதேச நடிகர்களும், இயக்குனர்களும் பங்கேற்கவுள்ளனர். Formula One Grand Prix எனப்படும் உலகப் புகழ்பெற்ற கார் பந்தயத்தை ஜெத்தாஹ் நகரம் தலைமை தாங்கிய அடுத்த நாள் இந்தத் திரைப்பட விழா ஆரம்பமாவதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்பட விழாவில் சுமார் 67 நாடுகளைச் சேர்ந்த 138 முழு நீள மற்றும் குறும் படங்கள் 30 இற்கும் அதிகமான மொழிகளில் காட்சிப் படுத்தப் படவுள்ளன.

இந்தத் திரைப்பட விழாவில் முக்கியமாக சவுதியைச் சேர்ந்த ஹைஃபா அல் மன்சூர் எனப்படும் முதல் பெண் இயக்குனர் கௌரவிக்கப் படவுள்ளார். 2012 ஆமாண்டு இவரது இயக்கத்தின் கீழ் வெளியான 'Wadjda' என்ற திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -

மியான்மார் நாட்டின் பதவி நீக்கம் செய்யப் பட்ட முன்னால் ஆட்சித் தலைவியான சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி இற்கு அந்நாட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இராணுவத்துக்கு எதிரான தூண்டுதல், மற்றும் கோவிட் விதிமுறைகளை மீறியமை போன்ற குற்றச் சாட்டுக்களுக்காகவே இவருக்கு இத்தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.

இத்தகவலை ஆங் சான் சூகி இன் பேச்சாளர் உறுதி செய்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction