பிபிசி, ஸ்கை நியூஸ், டைம்ஸ் மற்றும் கார்டியன் செய்தித்தாள்கள் போன்ற ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களை நாட்டிற்குள் நுழைவதை ரஷ்யா தடை செய்துள்ளது.
டஜன் கணக்கான பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புப் பிரமுகர்கள் நாட்டிற்குள் நுழைவதை மாஸ்கோ தடை செய்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷ்யாவைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவது உள்ளிட்ட காரணங்களை மாஸ்கோ கூறி, 29 பத்திரிகையாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஊடக அமைப்புகளின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தடை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் உயர்மட்ட பத்திரிக்கையாளர்கள், செய்தி தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிபிசி மற்றும் ஸ்கை நியூஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் மூத்த மேலாளர்கள் மற்றும் டைம்ஸ், டெய்லி டெலிகிராப், இன்டிபென்டன்ட் மற்றும் கார்டியன் செய்தித்தாள்களின் தலைமை ஆசிரியர்கள் அடங்குவது குறிப்பிடதக்கது.