free website hit counter

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைந்தார் !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இன்று தனது 96வது வயதில் காலமானார். அவரது மறைவினை பிரித்தானிய அரசகுடும்பம் இன்றிரவு 7.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அவரது மறைவினைத் தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய மன்னராகினார்

1952 பெப்ரவரி 6 ல் அவரது தந்தை ஜார்ஜ் VI இன் மரணத்தின் பின் முடிக்குரிய அரசியாக மகுடம் சூட்டிய எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் மிக நீண்ட காலம் 72 ஆண்டுகள் மகாராணியாக இருந்தார்.

அக்டோபர் 2021 இறுதியிலிருந்தே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அரச கருமங்களில் விலகியிருந்தார். இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில், நாடாளுமன்றத் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஜனநாயக மன்றத்தில் ராணியின் உரையை இளவரசர் சார்லஸ் படித்தார்.

அவர் தனது வாழ்க்கையின் கடைசி வாரங்களை அரச குடும்பத்தின் கோடைகால இல்லமான ஸ்காட்டிஷ் கோட்டையான பால்மோரலில் கழித்தார்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction