free website hit counter

பிறந்த பெண் குழந்தைக்கு "லில்லி" டயானா பெயரைச்சூட்டிய ஹாரி,மேகன் தம்பதி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இங்கிலாந்து நாட்டு இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர்; பிறந்த தங்களது இரண்டாவது குழந்தைக்கு லிலிபெட் என பெயரிட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஜூன் 4ஆம் திகத்இ வெள்ளிக்கிழமை இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 11:40 மணிக்கு பிறந்த குழந்தை, 7 பவுண்ட் 11oz எடையுள்ளவர் என்றும், இப்போது தமது வீட்டில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தைக்கு <லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்> என தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். ராயல் குடும்பத்தின் புனைப்பெயராகவும் இங்கிலாந்து ராணியின் செல்லப்பெயராகவும் லிலிபேட் இருந்துவந்திருக்கிறது. மேலும் குழந்தையின் பாட்டியாக இருக்கும் மறைந்த வேல்ஸ் இளவரசி <டயானா> அவர்களின் பெயரும் குழந்தையின் இடைப்பெயரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவ் இருவரையும் கௌரவிக்கும் விதமாக இப்பெயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை லிலிபேட்' ராணியின் 11 வது பேரக்குழந்தை மற்றும் அரியணைக்கு வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார்.

"ஜூன் 4 அன்று, எங்கள் மகள் லிலியின் வருகையால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம்.

"எங்கள் குடும்பத்திற்கான இந்த சிறப்பு நேரத்தில் நீங்கள் தொடர்ந்து காட்டிய தயவுக்கும் ஆதரவிற்கும் நன்றி." என ஹாரி மற்றும் மேகன் தம்பதியரின் ஆர்க்கெவெல் இணையதளத்தில் நன்றி தெரிவிக்கும் செய்தியில் கூறியுள்ளனர்.

36 வயதான இளவரசர் ஹாரி, மற்றும் 39 வயதாகவும் மேகன், 2018 மே மாதம் விண்ட்சர் கோட்டையில் நடந்த விழாவில் திருமணம் செய்து கொண்டனர். ஒரு வருடம் கழித்து அவர்களுக்கு முதல் குழந்தையான ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பிறந்தது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction